×

நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக மாணவிகளை பயன்படுத்த முயன்றார்..? விசாரணைக்கு முத்தரசன் வலியுறுத்தல்

ஈரோடு: பேராசிரியை நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக மாணவிகளை தவறாக பயன்படுத்த முயற்சி எடுத்தார். அந்த புள்ளி யார்? என உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை தொடர்ச்சியாக கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது. இவையெல்லாம் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசார முறை, அவர் அணுகும் முறை எல்லாம் ஹிட்லரை முன்னுதாரணமாக கொண்டுள்ளது. ஹிட்லர் வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கிட கர்நாடகா அரசிடம் கேட்கிறோம். இதில் காங்கிரஸ், பாஜ என யார்? ஆட்சியில் இருந்தாலும் ஒரு அடாவடி தனம் மேற்கொள்ளப்படுகிறது. இது நல்லதல்ல.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை வழங்கியதை வரவேற்கிறோம். ஆனால் அவர் யாருடைய சுகத்திற்காக மாணவிகளை தவறாக பயன்படுத்த முயற்சி எடுத்தார் என்ற கேள்விக்கு இதுவரை விடை வரவில்லை. அந்த பெரும்புள்ளி யார்? என உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

The post நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக மாணவிகளை பயன்படுத்த முயன்றார்..? விசாரணைக்கு முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nirmala Devi ,Tribune ,Erode ,State Secretary of ,Communist Party of India ,I. Mutharasan ,Election Commission ,Mutharasan ,Dinakaran ,
× RELATED குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்...